இத்தாலி நாட்டில் தினசரி பலி எண்ணிக்கை 143 பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இத்தாலியில் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,62,609 ஆக இருந்தது. இது ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸுக்கு பலியானவர்களில் பிரிட்டனை அடுத்து இரண்டாவது மிகப்பெரிய எண்ணிக்கை ஆகும்.
இந்த நிலையில் நேற்று இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ்க்கு 70, 520 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தினசரி பலி எண்ணிக்கை 202 ஆக இருந்த நிலையில் தற்போது 143 ஆக குறைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.