சாலையருகே நின்ற கரடியின் பக்கத்தில் போட்டோவுக்கு போஸ் கொடுத்த அழகிய இளம்பெண்ணுக்கு அந்த கரடி மரண பயத்தை காட்டி ஓடவிட்டது.
ரொமேனியா நாட்டின் மரங்கள் அடர்ந்த ஒரு பகுதியில், சாலையின் ஓரமாக கரடி ஒன்று நின்று கொண்டிருந்தது.. இதனை கண்டதும் அந்தவழியே வந்த கார்கள் வேடிக்கை பார்ப்பதற்காக நின்றன.. சிலர் தங்களது செல்போன்களில் அந்த கரடியை வீடியோ எடுத்தனர். அப்போது அங்கிருந்த காரில் இருந்து ஒரு பெண் இறங்கி வந்தார். மேலும் அந்த பெண்ணுடன் வந்தவர் புரபஷனல் கேமரா ஒன்றை எடுத்துக்கொண்டு அந்த பெண்ணையும், கரடியையும் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க தயாராக இருந்துள்ளார்.
அதன்பின் போஸ் கொடுப்பதற்காக அந்த பெண் முதலில் கரடியிடமிருந்து சற்று தொலைவில் நின்று கொண்டிருக்கிறார்.. அந்த கரடி எதுவும் செய்யாமல் அமைதியாக அமர்ந்திருக்கவே, அசட்டு தைரியத்தில் அதனருகே சென்று போஸ் கொடுக்க முயன்றார் அந்த பெண்.. அதுவரை மிகவும் அமைதியாக இருந்த அந்த கரடி சட்டென அவர் மீது பாய முயற்சி செய்ய மரண பீதியில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார் அந்த பெண்.