Categories
தேசிய செய்திகள்

இது தான் பிடிச்சிருக்கு….. வேலைக்கு போக மாட்டோம்…. IT ஊழியர்கள் கருத்து…!!

வீட்டிலிருந்தேபடியே  பணிபுரிவது நன்றாக உள்ளதாக ஐடி  நிறுவன ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா  பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். மேலும் வெளியே சென்று வேலை பார்த்த அனைவரும் ஒரே வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகின்றனர். ஐடி மற்றும் அது தொடர்பான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை கடந்த மாத இறுதியில் இருந்தே வீட்டில் இருந்தபடி பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கான  ஏற்பாடுகளையும் திறம்பட செய்து கொடுத்த நிலையில், ஐடி ஊழியர்கள் கணினியைக் கொண்டு அலுவலகத்தில் பார்த்த அதே வேலையை தற்போது வீட்டில் இருந்து பார்த்து வருகின்றனர். இது குறித்து ஊழியர்கள் பலர் கருத்து தெரிவிக்கையில், இது ஒரு புது அனுபவமாக இருக்கிறது. அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது நம்முடைய மூத்த அதிகாரி நம்மை ஏதேனும் குறை கூறி விடுவாரோ என்ற ஒருவித அச்சத்திலேயே வேலைபார்ப்போம்.

அவ்வப்போது நண்பர்களுடனும் தேவையற்ற நேரங்களை செலவிட்டு விட்டு பின் வேலையை முடிக்க வேண்டுமே என்று சுமைகளுடன் ஒருவித மன உளைச்சல் உடனே பணிபுரிந்து வந்தோம். ஆனால் தற்போது ஊரடங்கினால்  வீட்டிலிருந்தபடியே வேலை பார்ப்பதால் கொடுத்த இலக்கை விரைவாக முடிப்பதுடன், மன உளைச்சல் ஏற்படும் சமயங்களில் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதால் மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது. வீட்டிலிருந்து பணிபுரிவதால் அலைச்சல் இல்லை.

வேலைக்கு தாமதமாக சென்று விடுவோமோ என்ற பயம் இல்லை. காலை நேரங்களில் வேகமாக சாப்பிட்டுவிட்டு வேலைக்கு ஓட தேவையில்லை. வீட்டிலிருந்தபடியே ஆரோக்கியமான உணவுகளை நமக்கு ஏற்ற நேரத்தில் பிடித்தமாக உண்டு ஆரோக்கியமாக வாழலாம். இந்த நிலை அப்படியே நடித்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்து வருகின்றனர். 

Categories

Tech |