Categories
அரசியல் மாநில செய்திகள்

கோர்ட் சொல்லி 4 மாசம் ஆகுது….  1st இந்த தீர்ப்பை அமுல்படுத்துங்க..!  ஆதாரத்தோடு பேசிய ஹெச்.ராஜா …!!

அறநிலையத்துறையை கண்டித்து நீதிமன்றம் சொன்ன தீர்ப்பை காட்டி ஹெச்.ராஜா பேசினார்.

செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா, கோவில் நகை எல்லாம் உருக்கப்போகிறார்களாம் . அதில் இருக்கிற வைரம், வைடூரியம் இதெல்லாம் என்ன பண்ண போகிறார்கள். அதெல்லாம் கொள்ளையடிப்பதற்க்கா ? இந்து கோவில் சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளது திராவிட இயக்கத்தவர்களால்.. பொங்கலூர் பழனிச்சாமி கலைஞர் கருணாநிதியின் இன்ஜினியரிங் கல்லூரியில் சிதம்பரம் நடராஜருக்கும், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்ருக்கும் வில்வ பூஜைக்காக எழுதிவைத்த அறக்கட்டளை நிலம் இருக்கா ? இல்லையா ?

அதே மாதிரி திருச்சி துவரங்குறிச்சியில் இருக்கிறதே மொத்தம் 6 ஹிந்து கோவில். அந்த ஆறு ஹிந்து கோவிலுக்கு இருக்கின்ற நிலம் 30.4 ஏக்கர். அத்தனையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் ஏன் எடுக்கவில்லை ? தமிழகம் முழுவதும் இந்து கோவில் சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளது. அதில் வாசுதேவநல்லூரில் இருக்கின்ற 17 ஏக்கர் இடம் பிரச்சனை. அதேமாதிரி சிவகங்கை மாவட்டம் சூரக்குடியில் 40 ஏக்கர் பிளாட் போட்டுள்ளார்கள். இந்த 2 வழக்குகள் தான் மதுரையில் நடந்துள்ளது.

அதுல வாசுதேவநல்லூர் கோவிலினுடைய E.O சொல்கிறார்கள்…. இந்த நிலங்கள் எவ்வளவு இருக்கு ? ஆக்கிரமிப்புகள் இருக்கிறதா ? என்பது குறித்து எங்களிடம் ஆவணங்கள் இல்லை. இதை சொல்ல எதற்கு ஒரு அறநிலையத்துறை  ? அதனால் தான் நீதிபதி சொல்கிறார்கள்…  இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959 செக்சன் 78, 79, 80தில் மிக அதிகமான அதிகாரங்கள் கொடுத்தும், கடமை தவறியுள்ளனர். அவர்களை எல்லாம் பணி நீக்கம் செய்ய வேண்டும், சம்பள உயர்வு தடை செய்ய வேண்டும். அதை எல்லாம் ஏன் பண்ணவில்லை. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி நான்கு மாதம் ஆக போகிறது. ஆகவே நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவில்லை என்றால் இவர் செயல்படாத மந்திரி தான் என ஹெச்.ராஜா தீர்ப்பை சுட்டிக்காட்டி பேசினார்.

 

Categories

Tech |