Categories
மாநில செய்திகள்

70வயசு ஆகிடுச்சு…! யூத் ஐகானே மோடி தான்… இந்தியவைவே மாத்திட்டாரு..!!

பாரத பிரதமர் மோடி குறித்தான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நம்முடைய பிவி சிந்து அவர்கள்…  ஒலிம்பிக்கில் நமக்காக மெடல் எல்லாம் வாங்கி கொடுத்தவர்கள், கடுமையாக போராடி விளையாடக் கூடியவர்கள். அவர்கள் எழுதி இருக்கிறார்கள்….. ஒரு யூத் என்கின்ற அர்த்தத்தை எப்படி உடைத்திருக்கிறார் என்று ?

ஒரு யூத் என்றால் 30, 35 வயது கீழே 25 வயதிற்கு கீழே என்று, ஆனால் இன்றைக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் யூத் ஐகான் என்று சொல்கிறார். ஒரு 70 வயதில் இருக்கக்கூடிய ஒரு மனிதர்…  21 ஆண்டுகளாக தொடர்ந்து முதலமைச்சராக, பிரதமராக இருப்பவர். அந்த யூத் என்பதற்கு வயது முக்கியம் கிடையாது, யூத்தை யார் பூர்த்தி செய்கிறார்களோ அவர்களை யூத் ஐகான் என்று சொல்வார்கள் என்று பிவி சிந்து மிக அற்புதமாக அந்த சேப்டரை வடிவமைத்திருக்கிறார்கள்.

குறிப்பாக விளையாட்டு துறைக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள்…  ஒரு மல்டி டைமெஷன் புத்தகமாக….  அனைத்து விதமான சாரம்சமும் இருக்கிறது. விளையாட்டு துறையில் இருந்து பாதுகாப்பு துறைக்கு என்ன செய்திருக்கிறார் ? புதிய பரிமாணத்தை எப்படி கொடுத்திருக்கிறார்கள். நேஷனல் செக்யூரிட்டி முதலில் இந்தியாவென்றால் எப்படி இருந்தது? ஒரு வீக் ஸ்டேட் ஆக இருந்தது,

பெரும்பாலும் வேர்ல்ட் பவர்ஸ் டிக்டேட் பண்ற நிலைமையில் இருந்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகளில் நாம் இன்றைக்கு செட் பண்ணுவதற்கு, நாம் வேர்ல்ட் பவர்ஸ் அளவிற்கு நாமும் மேம்படுத்திக் கொள்கின்ற அளவிற்கு எப்படி வந்திருக்கின்றோம் ? அதுவும் குறிப்பாக நம்முடைய அஜித் தோவல் அவர்கள் புதிய வார்த்தையை அறிமுகப்படுத்தி இருக்கிறார். இதெல்லாம் நீங்கள் படிக்கும் போது எப்படி மோடி ஜி அவர்கள் முழு  இந்தியாவை  மாத்தி இருக்கிறார் என்ற புதிய விஷயங்கள் தெரியும் என தெரிவித்தார்.

Categories

Tech |