Categories
உலக செய்திகள்

ஒரு வருஷத்தில் இவ்வளவு செலவா… !அதுவும் உணவுக்காக மட்டுமா..!சுவிஸ் வெளியிட்டுள்ள தகவல்…!

சுவிட்சர்லாந்து பொதுமக்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டும்  உணவுக்காக அதிக பணத்தை  செலவிட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டும் சில்லறை வர்த்தக நிறுவனங்களில் உணவு மற்றும் பானங்கள்காக மட்டும் பொது மக்கள் அதிக அளவு செலவை செய்துள்ளனர். 2019 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது அதைவிட இது 11.3 சதவீதம் அதிகம் உள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

சுவிசில் வசிக்கும் ஒரு குடும்பம் உணவுக்காக 7,650 பிராங்குகள் செலவிட்டுள்ளனர். இதில் இணையம் வழியாக ஆடர் செய்த உணவின் செலவு சேர்க்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், பழங்கள் மற்றும் காய்கறிகளுக்காக 14% பணத்தை செலவிடுகின்றனர்.

கிராமப்புறங்களில் வசிப்பவர்களை விட நகர்ப்புற வாசிகள் குறைந்த அளவே இறைச்சி மற்றும் பால் பொருட்களை வாங்கி வருகின்றனர். குழந்தைகளுடன் இருக்கும் குடும்பங்களில் இறைச்சிகளின் தேவைகள் அதிகமாக உள்ளது. குழந்தைகள் இல்லாத வீடுகளில் காய்கறிகள் மற்றும் மதுபான அதிக அளவில் வாங்கப்படுகிறது.

Categories

Tech |