தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரின் நடிப்பில் அடுத்த வெளியாக போகும் பர்ஹானா திரைப்படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.ஸபிரபுவின் ட்ரீம் வாரியார் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து. இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்ற வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு கவிஞரும் எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் வசனம் எழுதியுள்ளார்.
மேலும் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு கொண்டுவர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஐஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஃபர்ஹானா திரைப்படத்திலிருந்து ‘ஒரு காதல் கனா’ என்ற முதல் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். இந்தப் பாடல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Happy to launch #OrrKadhalKanaa from #Farhana https://t.co/nT1kEsEseh
🎙️@AdnanSamiLive, @goldiesohel & @hariniivaturi
✍🏽 @UmadeviOfficialA @justin_tunes Musical
Best wishes @aishu_dil @nelsonvenkat @prabhu_sr @DreamWarriorpic & team 😊
— Raja yuvan (@thisisysr) October 7, 2022