Categories
மாநில செய்திகள்

ஊக்கம்… உற்சாகம்… தன்னம்பிக்கை… “இஸ்ரோவின் நோக்கம் விரைவில் வெற்றி பெறும்” துணை முதல்வர் ஓபிஎஸ் பாராட்டு..!!

ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் பணியாற்றிட வேண்டும் என்ற இஸ்ரோவின் நோக்கம் விரைவில் வெற்றி பெறும் என்று தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

இன்று அதிகாலை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பணி தொடங்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை என்பதால் இந்த அரிய நிகழ்வை காண நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் தொலைக்காட்சியில் பார்க்க காத்திருந்தனர். பிரதமர் மோடி  பெங்களூரு இஸ்ரோ மையத்திற்கு  ஆர்வமுடன் இதனை காண வந்திருந்தார். விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. லேண்டரில் இருந்து சமிக்ஞைக்காக (signal) இஸ்ரோ விஞ்ஞானிகள் காத்திருந்தனர். ஆனால் சிக்னல் கிடைக்காததால் இஸ்ரோ மையமே அமைதியானது.

Image result for isro's-mission-will-soon-succeed

 

இஸ்ரோ தலைவர் சிவன் லேண்டரில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை என்று கரகரத்த குரலில் அறிவித்தார். இதையடுத்து பிரதமர் மோடி  கடைசி நிமிட பின்னடைவு நிரந்தரமானதல்ல என்றார். பிரதமர் மோடி எதிர்வரும் விண்வெளி திட்டங்களில் விஞ்ஞானிகள் சாதிப்பார்கள் என்று நம்பிக்கையூட்டினார். மேலும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Image result for ஓபிஎஸ்

தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில், சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவில் இறங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.

”எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்”

என்ற திருவள்ளுவரின் வைர வரிகளை மனதில் நிறுத்தி குறிக்கோளை எட்ட மேலும் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் பணியாற்றிட வேண்டும் என்ற இஸ்ரோவின் நோக்கம் விரைவில் வெற்றி பெறும்

சந்திரனை நோக்கி சாதனைகள் படைக்க முயலும் போது சந்திக்கும் சில சிறு சோதனைகளை வெற்றிக்கான படிக்கட்டுக்கள் கருதி சவால்களை சமாளித்து விரைவில் சந்திரனை அடைந்த சகாப்தம் நடக்கவிருக்கும் இஸ்ரோ தலைவர் மற்றும் விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

Categories

Tech |