Categories
உலக செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்துடன் இஸ்ரேல் செய்த ஒப்பந்தம்… வெளியான அறிக்கை….!!!

இஸ்ரேல் அரசு, ஐக்கிய அரபு அமீரகத்தோடு தடையில்லாத வர்த்தக ஒப்பந்தத்தை செய்திருக்கிறது.

இஸ்ரேல் அரசு நேற்று அரபு நாட்டுடன் தடையில்லாத வர்த்தக ஒப்பந்தத்தை செய்திருக்கிறது. ஒரு அரபு நாட்டுடன் இஸ்ரேல் முதல் முறையாக வர்த்தக ஒப்பந்தத்தை செய்திருக்கிறது. இது பற்றி இஸ்ரேல் நாட்டிற்குரிய ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதராக இருக்கும் முகமது அல் காஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், இஸ்ரேல் நாட்டுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் மூலமாக தற்போது வரை செய்யாத சாதனையை இரண்டு நாடுகளும் செய்துள்ளன. இதனால் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் அதிகமான வேலைவாய்ப்புகள் இருக்கும் என்று கூறியிருக்கிறார். மேலும் இந்த ஒப்பந்தத்தால் இரண்டு நாடுகளுக்குமிடையே 96% பொருட்களுக்குரிய இறக்குமதி வரியானது முற்றிலுமாக ரத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |