Categories
உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி… ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹமாஸ் தீவிரவாதிகள்…!!!

ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் நாட்டின் மீது நள்ளிரவிலிருந்து தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே பல வருடங்களாக மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் மீது காசா முனையிலிருந்து அடிக்கடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இஸ்ரேலும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் இஸ்ரேல் நாட்டின் விமானப்படை காசா முனை பகுதியிலிருந்து வான்வெளி தாக்குதல் மேற்கொண்டது.

இதில், ஹமாஸ் தீவிரவாத அமைப்பில் பத்து நபர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் தீவிரவாதிகள் காசா  முனையிலிருந்து இஸ்ரேல் நாட்டின் மீது ராக்கெட் தாக்குதல் மேற்கொண்டனர். எனினும் இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்பு, அந்த ராக்கெட்டுகளை தடுத்து அழித்தது.

அதே சமயத்தில், ஹமாஸ் தீவிரவாதிகள், நள்ளிரவிலிருந்து தொடர்ந்து அதிகாலை வரை ராக்கெட் தாக்குதலை  மேற்கொண்டனர். இதனால், ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே கடும் மோதல் உண்டாகக்கூடிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

Categories

Tech |