Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் தூங்கியபோது ஏவுகணை தாக்குதல்.. தரைமட்டமான குடியிருப்பு.. வெளியான வீடியோ..!!

பாலஸ்தீனத்தில் நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியதில் ஒரு குடியிருப்பு தரைமட்டமாகியுள்ளது. 

சமீபகாலமாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இடையே மோதல் அதிகரித்து வருகிறது. இந்த மோதல் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. இதனால் அப்பாவியான பொதுமக்கள் ஏராளமானோர் கொல்லப்படுகின்றனர். மேலும் இஸ்ரேல் திடீரென்று ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தியதால் பொதுமக்கள் தப்பிக்க வழியின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதாவது நேற்று பாலஸ்தீனத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் நள்ளிரவு நேரத்தில் பொதுமக்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் அறிவிப்பு இல்லாமல் திடீரென்று இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. இதில் 2 பேர் பலியானதாகவும் ஐந்து நபர்கள் மீட்கப்பட்டதாகவும் தற்போது தகவல் கிடைத்திருக்கிறது. மேலும் இடிபாடுகளில் அதிகமானோர் சிக்கியுள்ளனர். எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |