Categories
உலக செய்திகள்

ஏவுகணை தாக்குதல் மேற்கொண்ட இஸ்ரேல்…. சிரியா வீரர்கள் இருவர் உயிரிழப்பு….!!!

இஸ்ரேல் வான்வெளி ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில் சிரியா நாட்டின் ராணுவ வீரர்கள் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் அரசாங்கத்தை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் போர் மேற்கொண்டு வருகிறார்கள் கடந்த 2011 ஆம் வருடத்தில் இருந்து நடக்கும் இந்த போரில் குழந்தைகள், பெண்கள் உட்பட இலட்சக்கணக்கானோர் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் போர் மட்டும் முடிவடையவில்லை.

இந்நிலையில் சிரியா நாட்டின் ஹோம்ஸ் மாகாணத்தில் அமைந்திருக்கும் ராணுவ விமான தளத்தில் இஸ்ரேல், ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருக்கும் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற போராளிகளை குறி வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த தாக்குதலில் சிரியா நாட்டின் ராணுவ வீரர்கள் இருவர் பரிதாபமாக பலியாகினர். மேலும் மூவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |