ஜெர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல், அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பிரிட்டன் சுற்றுலா பயணிகளை தனிமைப்படுத்த கோரியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சுற்றுலா தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே தான் ஏஞ்சலா மெர்க்கல், பிரிட்டன் சுற்றுலா பயணிகளை தனிமைப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை கேட்டிருக்கிறார். அதாவது பிரிட்டனில் டெல்டா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது.
எனவே இது போன்ற நாடுகளின், சுற்றுலா பயணிகளை பிற ஐரோப்பிய நாடுகளும் தனிமைப்படுத்த கோரியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எங்கள் நாட்டிற்கு பிரிட்டன் பயணி ஒருவர் வரும்பட்சத்தில் அவர் தனிமைப்படுத்தப்படுவார். இந்த விதி அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் பின்பற்றப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாக கூறியுள்ளார்.
அதாவது ஜெர்மன் அரசு, தங்கள் குடிமக்கள் பிரிட்டனிலிருந்து வந்தால், அவர்களுக்கு அனுமதி அளிக்கிறது. மேலும் வாழிட உரிமம் உடையவர்கள், உறவினர்களின் உயிரிழப்பு ஆகியவற்றிற்காக மனிதநேய அடிப்படையில் அனுமதியளிக்கிறது.
மேலும் ஜெர்மனியில், பிரிட்டன் மக்கள் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருந்தாலும் சுமார் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.