Categories
தேசிய செய்திகள்

இஸ்லாமிய அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது – உள்துறை அமைச்சகம்..!!

அண்டை நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை திருத்த சட்டம் 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய மதங்களைச் சேர்ந்த அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை.

இஸ்லாமியர்களுக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என குற்றம்சாட்டிய மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராடிவருகின்றனர். முக்கியமாக, வடகிழக்கு மாநிலங்கள் போராட்ட களமாக மாறியுள்ளது. சட்டத்தை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில், உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஆறு ஆண்டுகளில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 4000 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த 2,830 பேர், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 912 பேர், வங்கதேசத்தைச் சேர்ந்த 172 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டதாகவும் அதில், 100 பேர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அலுவலர் ஒருவர் கூறுகையில், “தகுந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்திருந்தாலே இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறது. எந்த மதத்தவருக்கு எதிராகவும் சட்டம் கொண்டுவரப்படவில்லை. மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படுவதையே மக்கள் எதிர்க்கின்றனர்” என்றார்.

Categories

Tech |