Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து : நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தியது ஒடிசா ….!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி நேற்று நடந்த ஒடிசா- நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஒடிசா அணி வெற்றி பெற்றது .

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் கொரோனா தடுப்பு  விதிமுறைகளை பின்பற்றி கோவாவில் உள்ள 3 மைதானத்தில் நடைபெற்று வருகிறது . அதேபோல் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது . இதனிடையே நேற்று நடந்த ஆட்டத்தில் ஒடிசா- நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி மோதியது.

இதில் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை .இதை தொடர்ந்து       2-வது பாதி ஆட்டத்தில் ஒடிசா அணி வீரர் ஜோனதாஸ் டி ஜீசஸ் 87- வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார் . இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணி முன்னிலையில் இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி கோல் அடிக்க முயற்சி செய்தது ஆனால் எதிரணியால் கோல் அடிக்க முடியவில்லை .இறுதியாக  1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணி வெற்றி பெற்றுள்ளது.

Categories

Tech |