ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் ஏ.டி.கே மோகன் பகான் அணி வெற்றி பெற்றது.
11 அணிகள் பங்கேற்கும் 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் – மோகன் பகான் அணிகள் மோதின . இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் நார்த் ஈஸ்ட் அணி வீரர் வி.பி.சுஹைர் 2-வது நிமிடத்தில் முதல் கோல் பதிவு செய்தார்.இதைதொடர்ந்து மோகன் பகான் அணி வீரர் லிஸ்டன் கோலாகோ 45-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார் .
இதனால் முதல் பாதி ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தது .இதன் பிறகு 2-வது பாதி ஆட்டத்தில் மோகன் பாகன் அணி வீரர் ஹ்யூகோ பூமஸ் 52-வது மற்றும் 70-வது நிமிடத்தில் 2 கோல் அடித்து அசத்தினார். இதனால் மோகன் பகான் அணி முன்னிலையில் இருந்தது. இதன் பிறகு நார்த் ஈஸ்ட் அணி வீரர் மசூர் ஷரீப் 87-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.இறுதியாக 3-2 என்ற கோல் கணக்கில் ஏ.டி.கே மோகன் பகான் அணி வெற்றி பெற்றது.