Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து: பெங்களூரு அணியை வீழ்த்தியது ஹைதாராபாத் ….!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று  நடந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கோவாவில் உள்ள 3  மைதானங்களில் இப்போட்டி நடைபெற்று வருகிறது .அதோடு இப்போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .இதனிடையே நேற்று  நடந்த லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் – பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் 7-வது நிமிடத்தில் ஹைதராபாத் அணியில் ஒக்பேச்சே முதல் கோலை பதிவு செய்தார். இதனால் 1-0 என்ற கணக்கில் ஹைதராபாத் அணி முன்னிலையில் இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பெங்களூர் அணி கோல் அடிக்க முயற்சி செய்தது .ஆனால் பெங்களூரு அணியால் கோல் அடிக்க முடியவில்லை.இறுதியாக 1-0  என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.

Categories

Tech |