ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று இரவு நடந்த சென்னையின் எஃப்சி – ஈஸ்ட் பெங்கால் அணிகளுக்கிடையேயான போட்டி டிராவில் முடிந்தது.
11 அணிகள் பங்குபெறும் 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி – ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.இதில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் 0-0 என்ற கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது . இதையடுத்து 3-வது ஆட்டத்தில் விளையாடிய சென்னை அணி 2 வெற்றி ,ஒரு டிரா என 7 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது .
அதேபோல் இன்னும் வெற்றி கணக்கை தொடங்காத ஈஸ்ட் பெங்கால் அணி 2 தோல்வி , 2 டிரா என 9-வது இடத்தில் உள்ளது . இதனிடையே இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்- எப்.சி. கோவா அணியும் , இரவு 9.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு-மும்பை சிட்டி அணியும் மோதுகின்றன.