ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 10 இந்தியர்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சரணடைந்துள்ளனர்.
சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சார்ந்த 900த்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் நேற்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சரணடைந்தனர். ஆப்கான் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த பயங்கரவாதிகளில் இந்தியர்கள் பத்துபேர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்களுடன் மனைவி மற்றும் குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசிய ஆப்கான் அதிகாரிகள், சரணடைந்த நபர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்றுவருவதாகவும், விசாரணைக்குப் பின் முழு தகவல்கள், இந்திய அரசுக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். அதுவரை இவர்கள் ஆப்கன் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பயங்கரங்களை தீவிரமாக அரங்கேற்றி வந்த போது, கேரளாவிலிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் அந்த அமைப்பில் சேரத் தொடங்கினர். பின்னர் அந்த அமைப்பானது கட்டுப்படுத்தப்பட்டது. அண்மையில் அந்த அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்டார்.