பாகிஸ்தானின் உளவுத்துறை அதிகாரி ஆப்கானிஸ்தானில் தலீபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு துருக்கி சென்றிருக்கிறார்.
ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் தலிபான்கள் கைப்பற்றினார்கள். அதன்பின்பு, அங்கிருக்கும் அரசியலை உருவாக்குவதில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பிற்கு முக்கிய பங்கு உள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் விதத்தில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அதிகாரியான சயஃப், கடந்த டிசம்பர் மாதத்தில் துருக்கிக்கு சென்று, ஆப்கானிஸ்தான் தலைவர்கள் பலரை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.
இதில், இந்தியாவிற்கு ஆதரவாக இருக்கும் தலைவர்கள் மற்றும் தலிபான்களை எதிர்க்கும் தலைவர்களும் அதிகமாக இருந்தனர். தலிபான்களை, அவர்களுடன் சமாதானம் செய்து வைக்க பாகிஸ்தான் முயன்று வருகிறது. மேலும் பாகிஸ்தான் அரசு, ஆப்கானிஸ்தான் நாட்டின் பிரச்சனையில் இந்தியாவை தலையிடாமல் தடுக்கும் வேலைகளையும் செய்து வருகிறது.