யசோதா படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சமந்தா தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கைவசம் தற்போது ஏராளமான படங்களை வைத்துள்ளார். இதனையடுத்து ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”யசோதா”.
தெலுங்கில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் உருவாகியுள்ளது. எம். சுகுமார் ஒலிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். சிவலிங்கா கிருஷ்ணா தயாரித்துள்ள இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது.
இந்த டீசரை தமிழில் சூர்யா, கன்னடத்தில் ரஷீத் செட்டி, மலையாளத்தில் துல்கர் சல்மான், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ஹிந்தியில் வருன்தவான் போன்றோர் ரிலீஸ் செய்தனர். இந்த டீசரின் மூலம் இந்த திரைப்படம் வாடகைத்தாய் மோசடி தொடர்பான கதை என்பது தெரிய வந்துள்ளது. இந்த படத்தில் மருத்துவமனையின் உரிமையாளராக வரலட்சுமி சரத்குமார் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் தெரிகிறது. நயன்தாரா வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்ற நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.