இன்று சேலத்தில் பேசிய தமிழக முதல்வர், இன்றைக்கு பொருளாதார மேம்பாடு இன்றைக்கு ஜிடிபி 8 சதவீதம் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் 8% இருக்குது. கொரோனா வைரஸ் தொற்று இருக்கின்ற காலத்தில் கூட புதிய புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தான் வருது. இந்த காலகட்டத்தில்… கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இந்த பாதிப்பு இருந்த மார்ச்சில் இருந்து இப்ப வரைக்கும் அதிகமான தொழிற்சாலையைத் தொடங்கி ஒரே மாநிலம் தமிழ்நாடு.
வேளாண்மையிலே முதலிடம், தொழிற்சாலையில் முதலிடம், சுகாதாரத் துறையில் முதலிடம், கல்வியில் முதலிடம், எல்லாம் முதலிடம் வந்து கொண்டிருக்கின்றது. அதனால ஸ்டாலினால் பொறுக்க முடியல. ஏதோ பழனிசாமி கிராமத்திலிருந்து வந்திருக்காரு. இவரால் ஒன்றும் செய்ய முடியாதுனு நினைச்சாங்க. அத்தனையும் சாதனை படைத்த அரசு எங்களுடைய அரசு.
அரசு எல்லா துறையிலுமே நாங்க சாதனை படைத்துக் கொண்டிருக்கும். தேசிய விருதுகளை பெற்றுக் கொண்டு இருக்கின்றோம். வேண்டுமென்றே திட்டமிட்டு தினம் தினம் ஏதாவது ஒரு அறிக்கை… பத்திரிக்கை வாயிலாக, ஊடகம் வாயிலாக விடுகின்றார். ரூம்ல இருந்துகிட்டு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். வெளிய போக மாட்டேன்கிறாரு.
எங்கேயாவது வெளியே வந்திருக்கிறாரா ? ரூம்ல உட்கார்ந்து இருக்கும்போது கூட கையில் உறை போட்டுக் கொண்டு, கண்ணாடி போட்டுக் கொண்டு தான் பாத்துட்டு இருக்காரு. அங்க என்ன வைரஸா வரபோகுது ? அவர் ஒருத்தர்தான் தனியா இருக்காரு. இங்க கூட எல்லாரும் இருக்கிறோம். நாட்டு மக்களுக்கு உழைக்க கூடிய ஒரே இயக்கம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.