Categories
சினிமா தமிழ் சினிமா

நம்ம நெப்போலியனா இது? திருமணத்தில் எப்படி இருக்கிறார் பாருங்க…. ஆச்சரியத்தில் ரசிகர்கள்….!!!

பிரபல நடிகர் நெப்போலியனின் திருமண புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் 90களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். இவரது உயரம், முறுக்கு மீசை, கிராமத்து உடம்பு ஆகியவற்றிற்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். இவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே அரசியலிலும் தனது சொந்த தொழிலிலும்  கவனம் செலுத்தி வந்தார். அதன்பின் அவருக்கு தொழிலில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக  வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்.

இந்நிலையில் நடிகர் நெப்போலியன் திருமண நாளை முன்னிட்டு நேற்று அவரது திருமண புகைப்படங்களை நடிகர் சங்கம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு நெப்போலியனுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளனர். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நம்ம நெப்போலியனா இது. திருமணத்தின் போது எப்படி இருக்கிறார் பாருங்க என்று ஆச்சார்யப்பட்டு கமண்ட் செய்து வருகின்றனர்.

Categories

Tech |