Categories
சினிமா

நாப்க்கினில் இவ்வளவு பிளாஸ்டிக் இருக்கா? விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட டாப்ஸி…!!

நடிகை டாப்ஸி பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருப்பவர் நடிகை டாப்ஸி. இவர் சமூகப் பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் பற்றிய தகவல் குறித்த ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் செல்லப்பட்டு தான் வருகிறது.மறைந்திருக்கும் பிளாஸ்டிக்கை நாம் சரியான முறையில் அப்புறப்படுத்துவது இல்லை. இது உலகிற்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு உதாரணமாக பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கினை சொல்லலாம்.

ஒரு சானிட்டரி நாப்கினில் 4 கிராம் பிளாஸ்டிக் இருக்கிறது. இந்தியாவில் உள்ள பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் 12.3 பில்லியன் நாப்கினை உபயோகிக்கின்றனர். இதில் இருக்கும் பிளாஸ்டிக்கின் அளவை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். பெண்கள் குப்பைத் தொட்டிகளில் போடும் நாப்கின்கள் நிலப்பரப்பிற்கு சென்றால் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?

அதுமட்டுமின்றி அதிக ரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் உள்ள சானிடரி நாப்கின்களை பயன்படுத்துவதால் கருப்பை புற்றுநோய் பிரச்சனையை ஏற்படும். ஆகையால் தயவு செய்து சுற்றுச் சூழலுக்கு ஏற்ற, எளிதில் மக்கும் தன்மை கொண்ட நாப்கின்கள் மற்றும் பைகளை பயன்படுத்தினால் நாம் முன்னேற முடியுமா? என்று பாருங்கள்.

மேலும் அறிவுரை வழங்குவது மிகவும் எளிது. ஆனால் அதைக் கடைப்பிடிப்பது தான் மிகவும் கடினம். இந்த கடினமான பணியை செய்தால் மட்டுமே நாம் பார்க்க விரும்பும் மாற்றத்தை உருவாக்க முடியும்”என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |