வெளிநாடுகளில் முக்கிய பதவி பொறுப்புகளில் இருக்கும் இந்திய வம்சாவளியினரின் பட்டியலை “இந்தியாஸ்போரா” நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க,பிரிட்டன்,ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர்,தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டன் உட்பட 15 வெளிநாடுகளில் இந்திய வம்சாவளியினர் எத்தனை பேர் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள் என்பதனை “இந்தியாஸ்போரா” அமைப்பு ஆய்வு செய்து அதன் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ், 60க்கும் மேற்பட்டோர் கேபினட் அமைச்சர் அந்தஸ்து கொண்ட பதவிகளை வகித்து வருகின்றனர். மேலும் அமெரிக்காவில் எம்பிக்கள் ஆக இருக்கும் அபி பேரா, ரத்னா ஒமிட்வர், பிஜி நாட்டு கல்வி அமைச்சர் ரோஸி அக்பர் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது.
இந்த பட்டியலில், எம்பிக்கள், தூதரக அதிகாரிகள், ரிசர்வ் வங்கி தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் 200 க்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளில் பணியாற்றி வருவது இடம் பெற்றுள்ளது. இவர்கள் எதிர்காலத் தலைமுறைகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கிறார்கள் என்று “இந்தியாஸ்போரா” நிர்வாகம் கூறியுள்ளது.