பிரபல சீரியல் நடிகை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறாரா என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. 4 சீசன்களை வெற்றிகரமாக கடந்து முடிந்த இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் பல திரை நட்சத்திரங்களின் பெயர்கள் பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் பங்கேற்க உள்ளனர் என்றும் சமூக வலைதளங்கள் செய்தி பரவி வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் அன்புடன் குஷி சீரியலில் முன்பு நாயகியாக நடித்து வந்த ரேஷ்மா பிக்பாஸ் 5இல் போட்டியாளராக பங்கேற்க இருக்கிறார் என்று பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து பேசிய ரேஷ்மா, நான் அன்புடன் குஷி சீரியலில் இருந்து விலகிய பின் நிறைய கதைகளைக் கேட்டு வருகிறேன். ஆகவே கூடிய விரைவில் குட் நியூஸ்களை தெரிவிப்பேன். ஆனால் தற்போது நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள இருக்கிறேன் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் வதந்தி என்று கூறியுள்ளார்.