Categories
சினிமா தமிழ் சினிமா

சீரியல் பிரபலத்தின் மகள் நடிக்க வருகிறாரா….? இணையத்தில் அவரே வெளியிட்ட அறிவிப்பு….!!

தெய்வமகள் சீரியல் பிரபலம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

மூத்த நடிகர் மற்றும் நடிகைகள் பலர் படங்களில் நடிப்பதைக் காட்டிலும், சீரியலில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பிரபல சன் தொலைக்காட்சியில் ஏராளமான ஹிட் சீரியல்கள் உள்ளது. அந்த சீரியல்களில் ஒன்று தெய்வமகள். இந்த சீரியலில் அண்ணியார் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பிரபலமானவர் ரேகா.

இவர் தற்போது சில சீரியல்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேகா, அடிக்கடி தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்தவகையில், இவர் தற்போது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், இவருடைய மகள் நடிக்க வருவதாக கூறியுள்ளார். ஆனால், அது பற்றிய விரிவான தகவல் எதுவும் அவர் கூறவில்லை.

https://www.instagram.com/p/CVAFF6ssxMm/

Categories

Tech |