Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இவ்வளவுதானா? இன்னும் ஏதாவது இருக்கிறதா ? என்று அம்மா என்னிடம் கேட்டார்கள்….!!

சேலத்தில் ரூபாய் 441 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

பல்வேறு திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டியதோடு, 35 புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய தமிழக முதல்வர், சேல மக்களுக்கு இதையெல்லாம் வேண்டும் என்று மாண்புமிகு அம்மா அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தேன். சேலம் மாநகர மக்களுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்க வேண்டு என்றால் மேம்பாலங்கள் வேண்டும் என்று அம்மாவிடம் கோரிக்கை மனு கொடுத்தேன். உடனே அதை பார்த்துவிட்டு இன்னும் ஏதாவது இருக்கிறதா ? இவ்வளவுதானா என்று என்னிடம் கேட்டார்கள்.

இந்த பகுதியில்தான் அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கின்றது அம்மா, நீங்கள் இந்த பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டி கொடுத்து சேலம் நகர மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்ட உடனே பாலத்துக்கு அனுமதி வழங்கி, அதற்கான நிதியும்  வழங்கி இன்றைக்கு அந்த பணிகள் எல்லாம் முடிக்கப்பட்டு  மக்களுடைய பயன்பாட்டுக்கு கொண்டு வந்து இருக்கின்றோம்.

ஏற்கனவே AVR ரவுண்டானா பாலம் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு விட்டது.  அம்மா அவர்கள் மண்ணில் இருந்து மறைந்தாலும், இன்று அவர்கள் அறிவித்த திட்டம் நமக்கு கண்முன் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. அவருடைய அறிவிப்பால் உருவாக்கப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

இரண்டு அடுக்கு மேம்பாலத்திற்கு அவருடைய நினைவாக, அவரைப் போற்றும் விதமாக மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் பெயரை இந்தப் பாலத்திற்கு சூட்டும் என்று தெரிவித்துக் கொள்கின்றேன். அதேபோல AVR ரவுண்டானா உயர்மட்ட பாலத்திற்கு முன்னாள் முதலமைச்சர் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய பெயரை அந்த பாலத்துக்கு சூட்டப்படுகிறது. பல்வேறு பாலங்கள் வேண்டும் என்று சேலம் மாவட்ட மக்கள் வைத்த கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றி இருக்கின்றோம் என்று முதல்வர் தெரிவித்தார்.

Categories

Tech |