தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, சாம் போன்றோர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் விஜய் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இதனால் வாரிசு படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கிறார். இவர்கள் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதன் காரணமாக தளபதி 67 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக பல முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாக ஏற்கனவே பல தகவல்கள் வெளியானது. அந்த வகையில் தற்போது தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக ஒரு புதிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆனால் ரசிகர்கள் இந்த தகவலில் உண்மை இருக்காது என்று ஒருபுறம் கூறினாலும், சிம்பு தளபதி 67 திரைப்படத்தில் இணைவதாக வந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.