Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈபிஎஸ்-ஸை முந்துகிறாரா ஓபிஎஸ்? என்ன நடக்கிறது அதிமுகவில்?

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி வரும் அக்டோபர் 7ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் பரபரப்பாக எழுந்திருக்கும் சூழலில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் கூடியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூடியது. செல்போன் பயன்படுத்த தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நடந்த இந்த கூட்டத்தில் நீட் தேர்வை கைவிட வேண்டும், கச்சத்தீவை மீட்க வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காரசார விவாதம்:

இதனை தொடர்ந்து முதல்வர் வேட்பாளர் யார் ? என்பது குறித்து காரசார விவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக சில அமைச்சர்களும், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை உடனடியாக அமைத்து அதன் பிறகே முதல்வர் வேட்பாளர் பற்றி முடிவெடுக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்ததாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து முதல்வர் வேட்பாளர் வழிகாட்டுதல் குழு அமைப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல் அதிமுக செயற்குழுவில் நிறைவு பெற்றது.

Storm Damage Districts: The Prime Minister does not see it in the eye of the grieving - the ADMK KP.Munusamy interview || புயல் பாதிப்பு மாவட்டங்களை: பிரதமர் நேரில் பார்க்காதது ...

7ஆம் தேதி அறிவிப்பு:

சுமார் 5 மணி நேரம் நீடித்த செயற்குழு கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி வரும் அக்டோபர் 7ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்படும் என தெரிவித்தார். முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி தான் அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் நீண்டநேர விவாதப் பொருளானது. அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் தொடர்ச்சியாக தங்களது கருத்துக்களை முன்வைத்ததால் சலசலப்பு நீண்ட நேரம் நீடித்தது.

முதல்வர் வேட்பாளர்:

கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலும், முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் தான் அதிகபட்ச நேரத்தை எடுத்துக் கொண்டுள்ளது. அமைச்சர் எஸ் பி வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் முதலமைச்சர் வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம், கே.பி முனுசாமி ஆகியோர் வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். ஆனால் சில நிர்வாகிகளை வழிகாட்டுதல் குழு வேண்டாம் என்றும், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

விட்டுக்கொடுங்கள்:

பல்வேறு தரப்பட்ட கருத்துகளை முழுமையாக ஒருமிக்க செய்வதே தலைமையின் வியூகம் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவருமே விட்டுக் கொடுக்க வேண்டும் என துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பாண்டியன் செயற்குழுக் கூட்டத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இபிஎஸ்-ஸை முந்தும் ஓபிஎஸ்:

முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அக்டோபர் 7ஆம் தேதியை அறிவிப்பது என முடிவெடுக்க அதிமுக தலைமையகத்தில் தனியாக ஒரு கூட்டம் நடந்துள்ளது. செயற்குழுக் கூட்டம் முடிந்த பின்பு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கே.பி முனுசாமி, வைத்தியலிங்கம், அமைச்சர்  தங்கமணி, எஸ் பி வேலுமணி ஆகியோர் தனித்தனியே ஆலோசித்தது தான் அந்த தேதியை முடிவு செய்திருக்கிறார்கள்.மொத்தத்தில் முதல்வர் வேட்பாளர் விவாதம் எழுந்த நிலையில் இபிஎஸ்-ஸை ஓபிஎஸ் முந்துவதாகவே தெரிகின்றது.

Categories

Tech |