Categories
சினிமா தமிழ் சினிமா

“என் மகள் இப்பதான் சந்தோஷமா இருக்கா”…. அவள் பாலாவை பார்க்க விரும்பல…. பாடகி அம்ரிதா அதிரடி….!!!!

பிரபல இயக்குனர் சிவாவின் தம்பியும், நடிகருமான பாலா மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் பாடகி அம்ரிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அதன் பிறகு நடிகர் பாலா மருத்துவர் எலிசபெத் என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இடையே சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், தற்போது பிரச்சினையை மறந்து இருவரும் இணைந்துள்ளனர். நடிகர் பாலா தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து சமீபத்தில் படம் பார்க்க சென்றிருந்தார். அப்போது நடிகர் பாலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் என்னுடைய மகளும் படம் பார்க்க வந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

ஆனால் என் மகள் படம் பார்க்க வரவில்லை என்று கூறிவிட்டார் என்று வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார். இதனால் பாலாவின் ரசிகர்கள் பலரும் அமிர்தா மீது அடுக்கடுக்கான குற்றங்களை சுமத்தி விளாச ஆரம்பித்தனர். இதன் காரணமாக அம்ரிதா தற்போது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் என்னுடைய மகள் அவருடைய அப்பாவை பார்க்க விரும்பவில்லை. தொலைபேசி மூலமாக பாலா படம் பார்க்க அழைத்த போது என் மகள் வரவில்லை என்று கூறிவிட்டார். தற்போது இருக்கும் சூழலில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார் என்னுடைய மகள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் பாடகி அம்ரிதா தற்போது பிரபல இசையமைப்பாளர் கோபி சுந்தருடன் லிவிங் டுகெதர் லைப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |