Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடிக்கு உடம்பு சரியில்லனா… ரூ.35 லட்சத்துக்கு விக்குறாங்க…! சீமான் பரபரப்பு பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 35 லட்சத்திற்கு நீட் தேர்வின் வினாத்தாளை விற்கிறார்கள். சத்தீஸ்கரில் பார்த்து, பார்த்து எழுதுவதற்கு சூப்பர்வைசர் யாராவது வருகிறார்களா என்று பார்த்து எழுத சொல்கிறார்கள், இதில் என்ன நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது? எதுக்கு நீட் தேர்வு? தகுதியான மருத்துவரை உருவாக்குவதற்காகவா ? அப்போ இதற்கு முன்னாடி இருந்த தேர்வு முறையில் தகுதியான மருத்துவர் உருவாகவில்லையா?

ஐயா மோடிக்கு உடம்பு முடியவில்லை என்றால் எந்த மருத்துவத்தை பார்ப்பார் என்று சொல்லுங்கள் ? ஏற்கனவே இருந்த மருத்துவர் தானே,  அப்போ அவர் தரம் இல்லையா? இந்தியாவில் தரமான மருத்துவரை உருவாக்க அமெரிக்காவில் இருக்கின்ற ப்ரோ மெட்ரிக் என்ற தனியார் நிறுவனத்திற்கு என்ன அவசியம் வருகிறது ?  இந்த தேர்வை நடத்துவதற்கு அவர்களுக்கு ஏன் ஒப்பந்தம் கொடுக்கிறீர்கள் ?

இந்தியாவில் தரமான மருத்துவர் உருவாக வேண்டும் என்றால், அமெரிக்காவில் இருக்கின்ற தனியார் நிறுவனத்திற்கு நேத்தி கடனா? மாரியாத்தா கோவிலில் வேண்டிகிட்டானா ? என்ன இது ? சுத்த பயித்தியக்காரத்தனம். இந்தியாவில் படிக்காமல் இருப்பது நல்லது, என்னை கேட்டால் என் பிள்ளைகள் படிக்காமல் இருப்பதே நல்லது. சீனா, ரஷ்யா மாதிரி வேறு நாடுகளுக்கு இப்போது என்னுடைய தம்பி மகன் பிலிப்பைன்ஸில் போய் படிக்கிறார்கள், அந்த மாதிரி போய் படிப்பது நல்லது. இந்த மாதிரி தேர்வு எழுதுவது கொஞ்சம் நாளுக்கு இருக்கும், இன்னும் 2, 3 ஆண்டுகள் பொறுங்க என தெரிவித்தார்.

Categories

Tech |