தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் நடிகர் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று ஜெயிலர் படத்தின் புதிய க்ளிம்ஸ் வீடியோ ஒன்று வெளியானது.
இந்த வீடியோவில் உள்ள ஒரு புகைப்படத்தில் நடிகர் ரஜினி மற்றும் லதா ரஜினிகாந்த் சேர்ந்து இருக்கும் ஒரு போட்டோ இடம் பெற்றுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ஜெய்லர் படத்தில் லதா ரஜினிகாந்த் நடிக்கிறாரா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் சிலர் லதா ரஜினிகாந்தின் புகைப்படத்தில் சற்று மார்பிங் செய்து அதில் ரம்யா கிருஷ்ணனின் புகைப்படம் இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.