நாம் பொது இடங்களுக்கு வரும் போது முகக்கவசம் அணிந்து வருகின்றோம், அது பாதுகாப்பானது. ஆனால் சிலர் உடற்பயிற்சி செய்யும் போது முகக்கவசம் அணிந்து உடற்பயிற்சி செய்கிறார்கள், அப்படி முகக்கவசம் அணிந்து உடற்பயிற்சி செய்யலாமா ? என்பதை விரிவாகப் பார்க்கவிருக்கிறோம்.
சீனாவின் ஒரு வாரத்திற்கு 14 வயது இரண்டு சிறுவர்கள் பலியாகினர். இறந்த இரண்டு சிறுவர்களும் முக கவசம் அணிந்து கொண்டு உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததுள்ளனர். இவர்களுக்கு பிரேத பரிசோதனை செய்யவில்லை, ஆனால் இறப்பு சான்றிதழில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளனர். அதே போல சீனாவில் தான் 26 வயது ஆண் முகக்கவசம் அணிந்து நான்கு கிலோமீட்டர் ஓடியபோது நுரையீரல் வெடித்தது. முகக்கவசம் அணிந்து கொண்டு உடற்பயிற்சியில் ஈடுபட்டதால் இந்த விபரீதம் ஏற்பட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
முகக்கவசம் அணிந்து உடற்பயிற்சி செய்வதால், உடலில் என்ன நடக்குது ?
தூய்மையான காற்றை சுவாசிக்க முடியாமல் உடல் திணறுகிறது. நுரையீரலுக்கு தேவையான காற்று கிடைப்பதில்லை. இதனால் ரத்தத்திற்கு போதுமான ஆக்சிஜன் இல்லை. இதன் காரணமாக மூளைக்கும் போதுமான ஆக்சிஜன் இல்லை. இதனால் தலை சுற்றுவது போல் நாம் உணர்கிறோம், மூச்சுத் திணறுகிறது. முகக்கவசம் அணிந்து கொண்டு உடற்பயிற்சி தொடர்ந்து செய்யும்போது உடல் உறுப்புகளுக்கு ஆபத்து ஏற்படலாம். முகக்கவசம் அணிந்து கொண்டு மூச்சு வாங்க, மூச்சு வாங்க உடல் பயிற்சி செய்யும் போது போதுமான ஆக்சிஜன் கிடைக்கவில்லை, இதனால் உடலில் உள்ள பாகங்கள் ஆபத்தில் முடியலாம்.
கொரோனாவில் இருந்து தப்பிக்கவே முகக்கவசம், கூட்டமான பகுதிக்கு சென்றால் அவசியம். மார்க்கெட்டில் காய்கறி வாங்க போனால் முகக்கவசம் கட்டாயம். ஒருவர் தும்மினாலோ, இருமினாலோ அவுங்க வாயில் உள்ள எச்சில் துளி அல்லது மூக்கில் இருந்து சளி துளி நேராக வந்து நம்முடைய வாயிலேயோ, முக்கிலேயோ பட்டால் கொரோனா வைரஸ் எளிதாக புகுந்து விடும். அதே போல நம்மளிடம் இருந்து வேறு யாருக்கும் நோய்த்தொற்று பரவாமல் இருக்க முகக் கவசத்தை அணிந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் உடற்பயிற்சி செய்யும் போது முகத்தில் அவசியமா ? என்ற கேள்வி எழுகிறது.
தனிமையில் இருக்கும் போதும் முகக்கவசம் அணிவதால் என்ன பயன்?
உடற்பயிற்சி செய்யும்போது அணிந்தால் ஆபத்து கூட நேரலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள், அதே போல முகக்கவசம் அணிவது குறித்து உலக சுகாதார மையம் சொல்வது என்னவென்றால், ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் கொரோனா பாதித்தவர்களுக்கு சேவை செய்யும் போது முகக்கவசம் அணிய வேண்டும். உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று WHO சொல்லவில்லை. தும்மல், இருமல் இருந்தால் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும்.
முகக்கவசத்தை கையால் தொடாதீர்கள், அதன் கயிற்றை மட்டும் கையை சுத்தப்படுத்திய பிறகு தொடலாம்.முகக்கவசம் அணிவோர் அதனை எப்படி பயன்படுத்துவது ? எப்படி தூக்கி எறிவது ? என அறிந்து கொள்வது கட்டாயம். உடல் பயிற்சி மேற்கொள்ளும் போது முகக்கவசம் அணிவதை சிந்திக்கவேண்டும் என்று உலகில் நடந்த நிகழ்வுகளை வைத்து ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். ஆனால் கடைக்கு செல்லும் போது, கூட்டமான இடத்திற்கு செல்லும் போது முகக்கவசம் கட்டாயம்.