தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து லைகா தயாரிப்பில் இவர் இரண்டு படங்களில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியானது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இதனையடுத்து ரஜினியின் 171 வது படத்தை இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக தகவல் பரவியது.
மேலும், இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், நடிகர் ரஜினிக்கு இயக்குனர் த.செ ஞானவேல் கதை சொல்லி இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.