பிசாசு 2 படத்தின் தயாரிப்பாளர் மிஷ்கினின் அடுத்த படத்தையும் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மிஷ்கின் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் வெளியாகும் அனைத்து படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் மற்ற இயக்குனர்களை போல் இல்லாமல் தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி அதன் மூலம் படங்களை உருவாக்கி வருகிறார்.
இந்நிலையில், நடிகர் மிஷ்கின் பிசாசு2 படத்தை இயக்கியுள்ளார். மேலும், பிசாசு2 படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மிஷ்கின் கூறியபடியே குறைந்த பட்ஜெட்டில் படத்தை எடுத்துள்ளாராம். அதுமட்டுமின்றி பிசாசு படத்தை பார்த்து நன்றாக இருக்கிறது என்றும் பாராட்டியுள்ளார். எனவே, மிஸ்கின் இயக்க இருக்கும் அடுத்த படத்தையும் நானே தயாரிக்கிறேன் எனவும் கூறியுள்ளார். மிஷ்கினும் இதற்கு சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.