Categories
மாநில செய்திகள்

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் ஊரடங்கு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? தலைமை செயலர் ஆலோசனை!

சென்னை தலைமை செயலகத்தில் சிறப்பு ஐபிஎஸ் அதிகாரிகளோடு தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் கொரோனா பாதிப்புகளை குறைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் சிறப்பு அதிகாரிகளோடு தலைமை செயலர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழக்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று வரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,762 ஆக உயர்ந்துள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் நேற்றுவரை கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 19,826 ஆக உள்ளது. அதில் தற்போது 9,282 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 210 பேர் உயிரிழந்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,624 பேரும், திருவள்ளுர் மாவட்டத்தில் 1191 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 483 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த மாவட்டங்களில் கொரோனா தாக்கம் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் குறித்து தலைமை செயலர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Categories

Tech |