Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

“சன்னா மசாலா” பாஸ்ட் புட் கடைல மட்டும் தான் கிடைக்குமா….? இனி வீட்லையே செய்யலாம்….!!

ஃபாஸ்ட் புட் கடைகளில் தயார்செய்யும் சன்னா மசாலாவை வீட்டில் ஆரோக்கியமான முறையில் செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.

தேவையானவை :

வெள்ளை சன்னா- ஒரு கப்,

மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்,

சீரகத்தூள் -அரை டீஸ்பூன்,

மிளகுத்தூள்- ஒரு சிட்டிகை,

சாட் மசாலா-  கால் டீஸ்பூன்,

 மாங்காய் தூள் (அருகிலுள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – கால் டீஸ்பூன்,

 பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன்,

 நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,

 உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை :

வெள்ளை சன்னாவை 6 லிருந்து 8 மணி நேரம் நன்கு ஊற வைக்கவேண்டும். ஊற வைத்த சன்னாவை  உப்பு சேர்த்து குக்கரில் 3 விசிலுக்கு கொதிக்க விடவேண்டும். பின் இறக்கி வைத்து தண்ணீரை வடிகட்டி மேலே கொடுக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக கலக்கி வர சுவையான சன்னா மசாலா ரெடி.

Categories

Tech |