பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியான சத்யா என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆயிஷா. இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 9-ம் தேதி தொடங்கிய நிலையில் ரசிகர்கள் மத்தியில் மற்ற சீசன்களை போன்று நல்ல வரவேற்பு இருக்கிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் தற்போது 19 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் வீட்டுக்குள் வைத்து ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட போது நடிகை ஆயிஷா மட்டும் தன்னை பற்றி எதுவுமே கூறவில்லை.
இதனால் பார்வையாளர்கள் பலரும் ஆயிஷாவுக்கு சொல்ல முடியாத அளவுக்கு அப்படி என்ன பிளாஷ்பேக் கதை இருக்கிறது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் ஆயிஷாவின் முன்னாள் காதலர் ஒருவர் ஏற்கனவே ஆயிஷாவுக்கு 2 முறை திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது என்று ஒரு புதிய குண்டை தூக்கி போட்டார். அதோடு நடிகை ஆயிஷாவின் காதல் தோல்விக்கு சத்யா சீரியலில் அவருடன் இணைந்து நடித்த நடிகர் விஷ்ணு தான் காரணம் என்றும் அவர் கூறினார்.
இந்த தகவல் இணையதளத்தில் தீயாக பரவிய நிலையில், நடிகர் விஷ்ணு தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, நான் ஆயிஷாவை காதலித்திருந்தால் அதை வெளிப்படையாக கூறும் அளவிற்கு எனக்கு தைரியம் இருக்கிறது. சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த ஆயிஷா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டார். அவருடைய வளர்ச்சியை பிடிக்காதவர்கள் தான் இது போன்ற வதந்திகளை பரப்பி வருகிறார்கள். மேலும் 100 நாட்கள் முடிந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வரும் ஆயிஷாவே உங்களுக்கு உண்மையை சொல்வார் என்றும் விஷ்ணு கூறியுள்ளார்.