Categories
இந்திய சினிமா சினிமா

ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் த்ரிஷ்யம்…. ஜீத்து ஜோசப் தகவல்..!!

மலையாளத்தில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மீனா நடிப்பில் வெளியான படம் த்ரிஷ்யம். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது, மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது த்ரிஷ்யம் 2 என்ற பெயரில் இயக்கி உள்ளனர். பிப்ரவரி 15ஆம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் ஜீத்து ஜோசப், ஹாலிவுட்டில் இந்த படம் ரீமேக் ஆக இருக்கும் தகவலை வெளியிட்டார்.

இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஹாலிவுட்டில் இருக்கும்  இந்தியர் ஒருவர் மூலமாக படத்தை ரீமேக் செய்யும் வேலைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். ஒரிஜினல் கதையில் கதாநாயகனை மையப்படுத்தி உருவாகி இருந்த இந்த படத்தை ஹாலிவுட் கதாநாயகியை மையப்படுத்தி திரைக்கதையை மாற்றி ஆங்கிலத்தில் எழுதி வருகிறார்களாம். இரண்டு முறை ஆஸ்கார் விருது பெற்ற ஹிலாரி ஸ்வாங்க் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. இந்த ஸ்கிரிப்ட் இறுதி செய்யப்படும் பட்சத்தில் ஹாலிவுட் இயக்குனர் ஒருவருக்கு இந்த படத்தை இயக்குவார் என்றும் ஜீத்து ஜோசப் கூறியுள்ளார்.

Categories

Tech |