பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளர்களில் இரண்டாவதாக ரம்யா வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது . இறுதிப் போட்டிக்கு தேர்வான 5 போட்டியாளர்களில் முதலாவதாக சோம் வெளியேற்றப்பட்டார். அவரை அழைத்துச்செல்ல பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னரான முகேன் ராவ் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து இருந்தார் .
தற்போது இரண்டாவது நபரை வெளியே அழைத்துச் செல்ல சீசன் 3 போட்டியாளரான கவின் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார் . இந்நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற கவின் ரம்யா பாண்டியனை வெளியே அழைத்து வந்துள்ளார் . இதிலிருந்து ரம்யா பாண்டியன் இறுதிப்போட்டியில் நான்காம் இடத்தை பிடித்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.