டிராக்டர் மீது மோதியதில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மைக்கேல்புரம் பகுதியில் சின்னதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வடபொன்பரப்பியில் இருந்து தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கும் போது முன்னால் சென்ற டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சின்னதுரை டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.