ஐரோப்பியாவில் மீண்டும் கொரோனா அவதாரம் எடுத்துள்ளதால் ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளது.
ஐரோப்பியாவில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியுள்ளது. அதிலும் சில நாடுகளில் 3-வது அலை மற்றும் 4-வது அலையும் ஏற்பட்டது. இந்நிலையில் ஜெர்மனியில் சமீபத்தில் ஏற்பட்டிருப்பது 4-வது அலையாகும் என கூறப்படுகிறது. இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 48,550 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 63,19, 311 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் மட்டும் 451 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை அங்கு 1,04,812 பேர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர். இதனிடையில் கொரோனா பாதிப்பிலிருந்து 52,25,700 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனா பாதிப்பால் 9,98,709 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.