IRCTC இந்திய ரயில்வேயின் கீழ் ஆன்லைனில் டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. IRCTC கணக்கிலிருந்து ஒரு மாதத்திற்கு அதிகபட்சம் 6 ஆன்லைன் டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ஆனால் இதனுடன் ஆதார் அட்டை இணைப்பதன் மூலம் ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இதற்கு IRCTC கணக்குடன் ஆதார் எண் இணைக்கும் செயல்முறையானது மிகவும் எளிதானது. அது எப்படி என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
முதலில் IRCTC-யின் அதிகாரப்பூர்வ மின்-டிக்கெட் பதிவு செய்யும் வலைத்தளமான irctc.co.in-க்குச் செல்லவும். அதில் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு LOGIN செய்யவும். பின்னர் முகப்பு பக்கத்தில் தோன்றும் “My Account section” க்குச் சென்று,”Aadhaar KYC” யில் கிளிக் செய்யவும். இதனையடுத்து அடுத்த பக்கத்தில் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு “Send OTP” என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது உங்கள் ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும். இந்த OTP ஐ உள்ளிட்டு வெரிஃபிகேஷன் செய்யவும். ஆதார் தொடர்பான தகவல்களைப் பார்த்த பிறகு, கீழே எழுதப்பட்ட ‘Verify’ என்பதைக் கிளிக் செய்யவும். இதன் பின்னர் KYC விவரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக உங்கள் மொபைலில் மெசேஜ் வரும்.