ரயிலில் பயணம் மேற்கொள்ளும் ஏராளமான பயணிகள் இப்போது IRCTCன் இணையதளம் (அ) ஆப் வாயிலாக தங்களின் டிக்கெட்டை ஆன்லைனில் முன் பதிவு செய்கின்றனர். எனினும் தாங்கள் கடைசியாக ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட்டுகளை எப்போது பதிவுசெய்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவு இருக்கிறதா..? இந்த வருடம் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் IRCTC 30 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட பயனர்களை கொண்டுள்ளது. இந்நிலையில் IRCTC இப்போது செய்திருக்கும் மாற்றங்கள் குறித்து தெரிந்துக்கொள்வது அவசியமான ஒன்று.
கொரோனா தொற்றுக்கு பின் ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், IRCTC பயன்பாடு மற்றும் இணையதளம் வாயிலாக டிக்கெட் முன் பதிவு செய்வதற்கான விதிகளை மாற்றியது. புது விதியின் அடிப்படையில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்னதாக பயனாளர்கள் தங்களது வெரிஃபை செய்யவேண்டும். சுமார் 40 லட்சம் பயனாளர்கள் தங்களது கணக்கை இன்னும் வெரிஃபை செய்யவில்லை. அவ்வாறு கணக்கை வெரிஃபை செய்யாத பயனாளர்கள் எதிர் காலத்தில் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய முடியாது என ரயில்வே தரப்பில் கூறப்பட்டு உள்ளது.