Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இரவு நேரங்களில் மாணவிக்கு ஆபாச படங்கள்…. கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனியாருக்குச் சொந்தமான கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது . அதில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த கல்லுரியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் தமிழ்த் துறை இணைப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வடவள்ளியில் உள்ள பிரியா நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இதையடுத்து திருநாவுக்கரசு இரவு நேரங்களில் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு ஆபாச மெசேஜ்களையும் மற்றும் புகைப்படங்களையும் அனுப்பி உள்ளார். அந்த மாணவி முதலில் தவறுதலாக அனுப்பிருப்பார் என்று நினைத்தார். அதன் பிறகு தொடர்ந்து இரவு நேரங்களில் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து மாணவி மற்ற மாணவர்களுக்கு தெரிவித்து புகார் மனு ஒன்றை எழுதி கல்லூரி செயலரிடம் கொடுத்தனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகம் நடத்திய விசாரணையில் பேராசிரியர் திருநாவுக்கரசு மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் மற்றும் புகைப்படங்களை அனுப்பியதாக உறுதி செய்து அவரை பணியிடை நீக்கம் செய்ய கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.ஆனால் இதில் திருப்தி அடையாத பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் சகமாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது பேராசிரியரை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அதன்பிறகு போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், இது குறித்து விசாரணை செய்ய தனிக்குழு ஒன்றை அமைத்து உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன்படி பேராசிரியர் திருநாவுக்கரசரிடம் அந்த குழுவினர் விசாரணை தொடங்கியுள்ளனர். விரைவில் விசாரணையின் முடிவு செய்து அறிக்கையை கல்லூரி நிர்வாகத்திடம் சமர்ப்பிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |