அமெரிக்கா, ஈரான் நாட்டின் எண்ணெய் கப்பல்களை கைப்பற்றியிருப்பதாக தெரிவித்திருக்கிறது.
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து, அமெரிக்கா கடந்த 2018 ஆம் வருடத்தில் வெளியேறியது. அப்போதிருந்து இரண்டு நாடுகளுக்குமிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும், அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா சேர்வது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது.
இந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் இருக்கிறது. தற்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஈரான் நாட்டின் மீது இருக்கும் பொருளாதார தடைகளை நீக்க தீர்மானித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஈரான் நாட்டினுடைய 2 எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது.
அமெரிக்க அரசு, ஈரான் நாட்டின் மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதார தடைகளை மீறும் விதமாக எண்ணெய் ஏற்றுமதி செய்ததால், கப்பல்கள் சிறைபிடிக்கப்பட்டதாக கூறியிருக்கிறது.