Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இரண்டு வயது குழந்தை கடத்தல்… இளம்பெண் மாயம்..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இரண்டு வயது குழந்தை கடத்தல்: இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

பல்லடம் அடுத்த அரசன் காட்டைச் சேர்ந்த சுடலை ராஜன் என்பவரின் குழந்தை மகாலட்சுமி, கடத்தப்பட்ட குழந்தையாகும், மனைவியை பிரிந்து வாழும் சுடலை ராஜன் மற்றும் அவரது தந்தை மாரியப்பனும்  குழந்தையை  பராமரித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு சென்ற மாரியப்பன், அங்கிருந்து இளம் பெண் ஒருவரை  அழைத்து வந்துள்ளார், அந்த இளம்பெண் மாரியப்பன் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டில் இருந்த குழந்தையை கடத்திக் கொண்டு மாயமாகியுள்ளார்.

குழந்தையின் தந்தை சுடலை ராஜன் அளித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையையும் கடத்திச்சென்று இளம் பெண்ணையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |