மிகப்பெரிய மதுபானத் தொட்டிகளை அகழாய்வின் போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஈராக்கில் 2700 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுபானம் தயாரிக்கும் கல் தொட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள டுஹோக் மாகாணத்தில் அகழாய்வில் ஈடுபட்டிருந்த இத்தாலி நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மெசபடோமியா நாகரீகத்தின் பொழுது மக்கள் திராட்சை பழங்களை நொதிக்க வைத்து அதிலிருந்து மதுபானம் தயாரிப்பதற்காக மலைப்பாறைகளை குடைந்து குழிகளை உருவாகியுள்ளனர்.
இந்த நிலையில் அதுபோன்ற 14 குழிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த மதுபானத்தொட்டிகள் தான் மத்திய கிழக்கு நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப் பழமையானவை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளத்தில் இணைக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.