Categories
டெக்னாலஜி

IQ Z6 lite…. குறைந்த விலையில் 5G ஸ்மார்ட்போன்…. தவற விட்டுறாதிங்க….!!!!

இந்தியாவில் ஐகூ நிறுவனம் புதிய IQ Z6 lite 5G ஸ்மார்ட்போனை september 14 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது ஸ்னாப்டிராகன் 4 jen 1 processor கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் அம்சங்கள் மற்றும் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் IQ Z6 lite 5G smartphoneன் இந்திய விலை விவரங்கள் வெளியாகி உள்ளது.

அதன் படி இந்திய சந்தையில் IQ Z6 lite 5G smartphone 4 GB RAM, 64 GB memory மாடல் விலை ரூ. 13,499 ஆக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. IQ Z6 lite 5G smartphone 6 GB RAM, 128 GB memory மாடல் விலை ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் விலை விவரங்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையில் உள்ளது. மேலும் இதன் விற்பனை அமேசான் மற்றும் IQ இந்தியா வலைதளத்தில் நடைபெற உள்ளது.

தற்போது இணையத்தில் லீக் ஆகி இருக்கும் விலை விவரங்கள் உண்மையாகும் பட்சத்தில் IQ Z6 lite 5G smartphone மாடல் குறைந்த விலை கொண்ட 5G ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி IQ Z6 lite 5G smartphone மாடலில் 6.58 inch FHD+ 120Hz refresh rate கொண்ட display, 5000 mah battery, 18 watt fast charging வசதி கொண்டுள்ளது.

மேலும் புகைப்படங்களை எடுக்க 50MP primary camera, 2MP depth / macro camera வழங்கப்படுகிறது. இத்துடன் android 12 os சார்ந்த funtouch os, அதிகபட்சம் 6 GB RAM, 2 GB virtual ram மற்றும் 128 GB memory வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மேம்பட்ட cooling system வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

Categories

Tech |